News
என்னை விமான அதிகாரி ‘இந்தியரா? என்று கேட்டார்: கனிமொழி எம்.பி.

என்னை விமான நிலைய அதிகாரி ஒருவர் இந்தியரா? எனக் கேட்டார் என கனிமொழி எம்பி தனது டுவிட்டரில் ஆவேசமாக குறிப்பிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கடந்த 50 ஆண்டுகளாகவே இந்திக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் இயக்கம் திமுக. சமீபத்தில் புதிய கல்வி கொள்கையில் இந்தி திணிப்பு இருப்பதாக திமுக குற்றஞ்சாட்டியது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி அவர்கள் தனது டுவிட்டரில் விமான நிலையத்தில் இருந்த அதிகாரி ஒருவர் என்னிடம் இந்தியில் கேள்வி கேட்டபோது எனக்கு இந்தி தெரியாது, எனவே அவரிடம் நான் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் பேசும்படி அறிவுறுத்தினேன். அதற்கு அவர் என்னை ’நீங்கள் இந்தியரா’ எனக் கேட்டார்
இந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை எப்போது உருவானது என்று கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். கனிமொழியின் இந்த கேள்விக்கு ஆவேசமாக நெட்டிசன்கள் பதில் அளித்து வருகின்றனர்
ஆனால் தற்போது தனக்கு ஹிந்தி தெரியாது என்று கூறும் கனிமொழி தான் முன்னாள் பிரதமர் விபி சிங் இந்தியில் பேசியதை தமிழில் மொழிபெயர்த்தார் என்று நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்
