அதிகாலை மட்டுமாவது கோவில் திறக்க வேண்டும்- பக்தர்கள் கோரிக்கை

மனதுக்கு அமைதி அளிப்பது கோவில்கள் மட்டுமே, அதேபோல பல பக்தர்களது ஒட்டுமொத்த பிரார்த்தனையையும் இறைவன் ஏற்றுக்கொண்டு பக்தர்களுக்கு இறைவன் அருள் வழங்குவதாக பொதுவான இறை நம்பிக்கை அனைவரிடத்திலும் உண்டு.

907ea9df3343c6eb463a4f5a51357da9-1

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக கோவில்கள் எதுவும் திறக்கப்படாததால் பல ஆன்மிகவாதிகள் கடும் வருத்தத்தில் உள்ளனர்.

கோவில்கள் என்றில்லை மசூதி, சர்ச் என எந்த வழிபாட்டுத்தலங்களும் திறக்கவில்லை என எல்லா மதத்தவர்களுமே கடும் வருத்தத்தில் உள்ளனர்.

மிகவும் மோசமான சமூகத்துக்கு கேடு விளைவிக்க கூடிய மதுக்கடைகளை திறந்த அரசு கோவில்களை ஏன் திறக்கவில்லை என பல பக்தர்கள் மிகுந்த வருத்தத்திலும் கோபத்திலும் உள்ளனர்.

பக்தர்கள் பலரும் கோவில் சென்று வேண்டிக்கொண்டால் கூட பக்தர்களின் பிரார்த்தனை வலிமையால் கொரோனா வியாதி கட்டுக்குள் வரலாம் என்பது பலரது நம்பிக்கை.

இந்த நிலையில் சில பக்தர்கள் வைக்கும் கோரிக்கை நியாயமான முறையிலும் உள்ளது.

மற்ற கடைகள், போக்குவரத்துக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்கும் அரசு கோவில்களை அதிகாலையில் திறக்க செய்து சில மணி நேரம் பக்தர்களை தரிசிக்க செய்யலாம். இந்த நேரத்தில் கோவிலுக்கு செல்ல வேண்டும் என நினைக்கும் பக்திமான்கள் கூட அதிகாலை நேரத்தில் பெரும்பாலும் எழுந்து கிளம்ப மாட்டார்கள். மிக அளவு கடந்த பக்தியுடன் இருப்பவர்கள் மட்டுமே மிக அதிகாலையில் கோவிலுக்கு வருவார்கள் எனவும் இதனால் மிக குறைந்த மக்கள் கோவிலுக்கு வருவதோடு சமூக இடைவேளையோடு அனைத்தும் கடைபிடிக்கப்படும் அரசு இதை செய்யுமா என பக்தர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.