வினிகரை இப்படியும் பயன்படுத்தலாமா?!


c3048681633234699c78f8ad87a7bbe9-1

வினிகரின் பயன்பாட்டினை முன்பொரு பதிவில் பார்த்திருக்கோம். இன்னிக்கு இன்னும் சில பயன்பாட்டினை பார்க்கலாம்.

குழந்தைகளின் வெள்ளை யூனிஃபார்ம் துணிகளை வாரத்திற்கு ஒருமுறை நீலம் போடுவதற்குமுன் ஒரு பக்கெட் நீரில் இரண்டு ஸ்பூன் வினிகர் கலந்து அதில் துணிகளை முக்கி எடுத்து பிறகு நீலம் போட்டு அலசுங்கள். துணிகள் தும்பைப் பூவைப்போல் வெண்மையாக இருக்கும்.

ப்ரஷர் குக்கரில் துரு பிடித்து கெட்டியாகி விட்ட ஸ்க்ரூவின் மேல், இரண்டு சொட்டு வினிகர் விட்டு, சற்று நேரம் கழித்துத் திருகினால் சுலபமாலக எடுக்க வரும்.

பித்தளை தட்டு, பாத்திரங்கள் பச்சையாக நிறம் மாறிவிட்டால், வினிகருடன் உப்ப சோத்து, சற்று ஊற வைத்து அழுத்தித் தேய்த்தால் பழைய நிறம் திரும்பும்.

சமையலறையில் உள்ள அலமாரியில் பூச்சிகள் தொல்லை ஏற்படாமலிருக்கு, வாரம் ஒருமுறை வினிகர் கலந்த நீரால் துடைக்க வேண்டும்

முட்டை வேகவைக்கும்போது முட்டை வேக வைக்கும் தண்ணரீல் சில துளிகள் வினிகர் சேர்த்தால் வெண்கரு பிரியாமல் இருக்கும்.

பச்சைப்பட்டாணி வேகவைக்கும் போது, பச்சை நிறம்போகமலிருக்க, சில துளி வினிகர் ஊற்றி வேக வைத்தால் பச்சை நிற போகாது.

தரையில் முட்டை விழுந்து உடைந்தால் சிட்டிகை உப்பு, வினிகர் இரண்டும் கலந்து துடைத்துவிட்டால், துர்நாற்றம் வராது.

மீன் கழுவும் போது, சிறிதளவு, உப்பு, வினிகர் இரண்டும் சேர்த்து கழுவினால் அந்த மீனின் கெட்ட வாடை நீங்கி விடும். மீனை உடனேயே சமைக்கவில்லை என்றாலும் வினிகர் ஊற்றி நன்றாக மூடி ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் மீன் இரண்டு நாட்கள் கெடாமலிருக்கும்.

கீரையோ, காயோ வாடியிருக்கிறதா? அது மூழ்குமளவு நீர் ஊற்றி ஒரு பாத்திரத்தில் வைத்து ஒரு ஸ்பூன் அளவு (அல்லது காய்களின் அளவுக்கேற்ப) வினிகர் ஊற்றி வைத்து விடுங்கள். பதினைந்து நிமிடத்தில் காய், கீரை எதாக இருந்தாலும் சோர்வு நீங்கி மலர்ந்த முகத்தோடு புதியது போல் காட்சி தரும்.

ஒரு கப் வினிகரை ஒரு கப் சுடுநீரில் கலந்து கறைகளின் மீது தடவி, சிறிது நேரம் கழித்து சோப்புக் கரைசலைப் பல்துலக்கும் தூரிகையில் நனைத்து தரையைத் தேய்த்தால் மார்பிள் பளபளக்கும்.

வினிகரின் பயன்பாடுகள் தொடரும்…

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...