தீபாவளியின் வரலாறு!

தீபாவளி என்பது தீமை அகன்று நன்மை பிறக்கும் நாளாகும் ஆதலால் அதனை மிகவும் மகிழ்ச்சியுடன் புத்தாடை, எண்ணெய் குளியல், பலகாரங்களுடன், கொண்டாடி வருகிறோம்.

தீபாவளிக்கு இந்து புராணங்களில் பல கதைகள் உள்ளன. திருமாலுக்கும் பூமாதேவிக்கும் பிறந்தவர் தான் நரகாசுரன். நரகாசுரனின் இயற்பெயர் பவுமன். திருமால் அசுரர்களுடன் போர் புரியும் போது அவதரித்தவர் தான் நரகாசுரன். ஆதலால் நரகாசுரனுக்கு அசுர குணம் பிறவியிலே இடம் பெற்றிருந்தது.

நரகாசுரன் மக்களை மிகவும் துன்புறுத்தினான். அசுர குணத்தினால் அனைவரையும் தொல்லை செய்தான். இதனை கண்ட மகாவிஷ்ணு கோபமடைந்து நரகாசுரனுடன் போர் புரிந்தார். ஆனால் நரகாசுரனை அழிக்க முடியவில்லை. ஏனென்றால் நரகாசுரன் ஒரு வரம் பெற்றிருந்தான் தன் தாயினால் மட்டுமே அவனை அழிக்க முடியும்.

நரகாசுரன் மகாவிஷ்ணுவை போர்கலத்தில் எதிர்த்து நின்றான். மகாவிஷ்ணுக்கு எதிராக அம்புகளை தொடுத்தான். அதில் மகாவிஷ்ணு மயக்கம் அடைவது போல் நடித்தார். இதனை கண்டு ஆத்திரமடைந்த சத்திய பாமா நரகாசுரனுடன் போர் தொடுத்தார். பூமாதேவியின் அவதாரம் தான் சத்திய பாமா என்று தெரியாமல் நரகாசுரன் சத்திய பாமாவின் அம்பிற்கு பலியானான்.

நரகாசுரன் தன் தாயிடம் நான் மறைந்த நாளை மக்கள் அனைவரும் ஒளிமயமாகவும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்று கோரியதாகவும் அதன்படி தீபாவளி பண்டிகை இவ்வாறு கொண்டாடப்படுகிறது என இந்து புராணக் கதைகள் தெரிவிக்கின்றன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.