காரடையான் நோன்பு அடை செய்யும் முறை…

20dae6b3a50491a5b9fcd266dd6b21dc

காரடையான் நோன்பு மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் பிறக்கும்போது அனுஷ்டிக்கப்படும். நுனி வாழை இலையில் பச்சரிசி பரப்பி, கும்பம் வைத்து, வெற்றிலை பாக்கு வைத்து, பழங்கள் வைத்து மஞ்சள் சரடு வைத்து நாலு காரரிசி, காராமணி சேர்த்து செய்த இனிப்பு, உப்பு அடையை நைவேத்தியமாய் படைப்பது வழக்கம்.

இந்த அடையை செய்வது எப்படின்னு பார்க்கலாமா?!

உப்பு அடை…

f287141981888652d6e45af82984e485-1

தேவையான பொருட்கள்

உப்பு அடை

  • அரிசி மாவு – 1 கப்
  • தண்ணீர் – 2 கப்
  • தேங்காய், பற்கள் நறுக்கியது – 4 மேஜைக்கரண்டி
  • காராமணி – 1/4 கப்
  • உப்பு – தேவைக்கேற்ப
  • எண்ணெய் – 1 தேக்கரண்டி
  • கடுகு – 1/2 தேக்கரண்டி
  • பெருங்காயம் – 1 சிட்டிகை
  • பச்சை மிளகாய் – 2
  • கருவேப்பிலை –

அடை செய்யும் முறை

  1. அரிசியை 2 மணிநேரம் ஊற வைக்கவும். ஒரு சுத்தமான துணியில் அரிசியை உலர்த்தவும்.
  2. கராமணியை நன்றாக வாசனை வரும் வரை மிதமான தீயில் வறுக்கவும்.
  3. இதனை, தண்ணீரில் ஊறவைக்கவும்.  காராமணியை நன்றாய் வேகவைக்கவேண்டும்.
  4. அரிசியை மாவாக அரைக்கவும். இந்த அரிசி மாவை சலித்துக்கொள்ளவும்
  5. சலித்த மாவை அளந்து கொள்ளவும். தண்ணீருடன் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாய் கிளறிக்கொள்ளவேண்டும். வெந்த காராமணியையும் சேர்த்து கிளறி, எண்ணெய் தொட்டு, வடைபோல் தட்டி ஆவியில் வேகவைக்க வேண்டும்
afb4ab2782a1903bd9707429b809f25e

இனி வெல்ல அடை செய்யும் முறை

  • அரிசி மாவு – 1 கப்
  • வெல்லம் – 1 கப்
  • தண்ணீர் – 2 கப்
  • தேங்காய், பற்கள் நறுக்கியது – 4 மேஜைக்கரண்டி
  • காராமணி – 1/4 கப்
  • ஏலக்காய் – 1

  1. வெல்லத்தில் தண்ணீர் மூழ்கும் வரை ஊற்றி, வெல்லம் கரையும் வரை சூடு செய்யவும்.
  2. வெல்லம் கரைந்ததும், ஒரு வடிகட்டியில் ஊற்றி வடி கட்டவும். பாத்திரத்தை கழுவி மறுபடியும் வெல்ல பாகை சூடு செய்யவும். கொதிக்கும் பாகில் காராமணியை சேர்க்கவும். 2 நிமிடங்கள் கொதிக்க விடவும் . இதில் மாவை சேர்க்கவும்.
  3. குறைந்த தீயில், கெட்டியாகும் வரை கிளறவும். தேங்காய் பற்களை சேர்த்து கிளறி, இறக்கி வைக்கவும்.
  4. உப்பு அடைக்கு, ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து, கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும். கருவேப்பிலை, பெருங்காயம்,பச்சை மிளகாய்  சேர்த்து, தண்ணீர் , உப்பு  சேர்த்து கொதிக்க விடவும்.  காராமணியை சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விடவும். மாவை கொட்டி, மிதமான தீயில் கிளறவும்.
  5. தேங்காய் பற்கள் சேர்த்து, கிளறி, மாவு கெட்டியானவுடன் இறக்கி, மூடிவைக்கவும்.
  6. இரெண்டு (இனிப்பு மற்றும் உப்பு) மாவையும் ஆரிய பின், கைகளில் சிறிது எண்ணெய் தொட்டுக்கொண்டு பிசைந்து, சமமான உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
  7. எண்ணெய் தடவிய இட்லி தட்டில் சிறு அடைகளாக தட்டி, நடுவில் ஒரு ஓட்டை ஈட்டி, அடுக்கவும். இட்லி பானையில் வைத்து, 5-8 நிமிடம் வரை வேகவைக்கவும். .. அடையுடன் வெண்ணெய் சேர்த்து
    உருகாத வெண்ணெயும், ஓரடையும் நோன்பு நோற்றேன். ஒருக்காலும் என் கணவன் என்னை விட்டுப் பிரியாமல் இருக்க வேண்டும் என அம்பிகை வேண்டி விரதத்தினை கடைப்பிடிக்கனும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.