ஆண்களுக்கு இடுப்பில் அரைஞாண் கயிறு கட்டுவது எதற்கென தெரியுமா?!


ஆணோ, பெண்ணோ பிறந்ததும் கறுப்பு, சிவப்பு கயிறு ஒன்றை கட்டுவார்கள். அதில் அவரவர் குடும்ப வழக்கப்படி மணிகள் கோர்த்து ஆணாய் இருந்தால் வெள்ளியிலான மணியும், பெண்ணாய் இருந்தால் வெள்ளியிலான அரச இலையும் கட்டி விடுவர். இன்னும் சிலர் தொப்புள் கொடியை தாயத்திற்குள் வைத்து அதயும் கட்டிவிடுவர். இதுலாம் அவரவர் குடும்ப வழக்கமாகும். குழந்தை கொஞ்சம் வளர்ந்ததும் வெள்ளியிலான அரைஞாண் கொடியை கட்டிவிடுவர். குறிப்பிட்ட பருவம் வந்ததும் பெண்ணுக்கு அரைஞாண் கயிறு கட்டுவது நிறுத்திவிடுவர்.

இவ்வாறு அரைஞாண் கயிறு கட்ட குழந்தைகளுக்கு திருஷ்டி படக்கூடாது என கட்டுவதாய் நினைப்போம். அது உண்மையல்ல.. ஆண்கள் இடுப்பில் கட்டும் அரைஞாண் கயிற்றின் பின் மருத்துவ காரணம் உண்டு. ஞாண் என்றால் தொங்குதல் என்று பொருள். அரை என்பதற்கு இடுப்பு, அரை உடல் என்ற பொருளும் இருக்கிறது. இதனால் தான் அரைஞாண் கயிறு என இதற்கு பெயர் பொருள் வந்தது.

ஆண்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந்நோயைத் தடுக்கவே, இடுப்பில் அரைஞாண் கயிறு கட்டுகிறது பழக்கம் ஏற்பட்டது. உடல் பருமன் உடலுக்கு நாம் செய்யும் தீமையாகும். அளவுக்கு அதிகமாக உண்டு குடலினுள் பாரம் உண்டாக்குவதால் குடல் இறக்க நோய் உண்டாகும். இது தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத்தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன. இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள்.

ஆனால், இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.