Connect with us

லாக் டவுன் நீட்டிப்பா இல்லையா உடனே சொல்லுங்க -ஸ்டாலின்

Tamil Nadu

லாக் டவுன் நீட்டிப்பா இல்லையா உடனே சொல்லுங்க -ஸ்டாலின்

ஊரடங்கு குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் 24ல் ஆரம்பித்த லாக் டவுன் ஏப்ரல் 14ல் முடிவுக்கு வந்த நிலையில் இந்த லாக் டவுனை மே 3 வரை மத்திய அரசு தள்ளி வைத்தது.

07909fe2ef31e8c8d23092ad31f76216-1

இந்த நிலையில் மே 3 நெருங்கி வருகிறது. இதற்கு இன்னும் 4 நாட்களே உள்ளன.

இந்நிலையில், ஊரடங்கு தொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோய்த் தொற்று பரவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட இரண்டாவது ஊரடங்கு காலம், மே 3-ம் தேதியோடு  முடிவடைகிற நிலையில், மேலும் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, நீக்கப்படுமா அல்லது படிப்படியாகத் தளர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பும் குழப்பமும் மக்கள் மனதில் நிலவுகிறது. கொரோனா பரவலைத் தடுத்து மக்களைப் பாதுகாப்பதற்காக,  மத்திய – மாநில அரசுகள் எடுக்கின்ற எந்த முடிவாக இருந்தாலும் அதற்குக் கட்டுப்பட்டு சமூக ஒழுங்கைத் தவறாமல் கடைப்பிடித்து ஒத்துழைக்க வேண்டியது பொதுமக்களின் தலையாய கடமையாகும்.

அதேநேரத்தில், ஊரடங்கை நீட்டிப்பது அல்லது தளர்த்துவது குறித்து கடைசி நேரத்தில் அறிவித்து பதற்றத்தை அதிகரித்திடாமல், தக்க முடிவெடுத்து முன்கூட்டியே அறிவித்தால், பொதுமக்களிடம் தேவையற்ற பரபரப்பையும், பதற்றத்தையும்  பெருமளவுக்குத் தவிர்க்க முடியும். 35 நாட்களுக்கும் மேலாக வீட்டிலேயே முடங்கி இருக்கும் மக்களின் மனநிலையையும், வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, மத்திய – மாநில அரசுகள் உரிய முடிவெடுத்து சிறிதும் தாமதிக்காமல்  அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top