அசத்தலான அம்சங்களுடன் வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட் டிவி

e8c16a13910d3e5e659fb04fc427632d

இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் மொபைல் போனை அறிமுகம் செய்த பிரபல நிறுவனமான நோக்கியா தற்போது ஸ்மார்ட் டிவி ரகங்களை இந்தியாவுக்கென பிரத்யேகமாக வெளியிடுகிறது. இந்த ஸ்மார்ட் டிவிக்களை ஃப்ளிப்கார்ட் மூலம் வாங்கலாம்

சிறப்பான சவுண்ட் சிஸ்டம், டால்பி ஆடியோ, டிடிஎஸ் என ஆடியோவின் சிறப்பான அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் டிவியின் அளவு 50இன்ச் ஆகும். 4K UHD ரெசொலியூஷன் மற்றும் ஆண்ட்ராய்டு 9.0 அடிப்படையில் இயங்கும் இந்த டிவியில் கூகுள் ப்ளே ஸ்டோர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சமீபத்தில் மோட்டரோலா இந்தியாவில் ஸ்மார்ட் டிவியை பிளிப்கார்ட் மூலம் அறிமுகம் செய்தது. இதற்கு போட்டியாக தற்போது நோக்கியா ஸ்மார்ட் டிவி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டரோலா ஸ்மார்ட் டிவி-யின் விலை 64,999 ரூபாய் என்ற நிலையில் நோக்கியா ஸ்மார்ட் டிவியின் விலை என்ன? என்பது அடுத்த மாதம் வெளியாகும்போது தெரிய வரும்

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print