Connect with us

கண்களை கண்போல பார்த்துக்கோங்க!

Health

கண்களை கண்போல பார்த்துக்கோங்க!

மனிதர்களின் சோகம், துக்கம், சந்தோஷம் போன்ற பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கண்ணாடி கண்கள்தான். திடீரென உடல் எடை குறைதல், தூக்கமின்மை, வேளாவேளைக்குச் சரியாகச் சாப்பிடாமல் இருப்பது, சத்துக் குறைபாடு, தரமில்லாத மேக்கப், வெயிலில் அதிகம் அலைவது, மன உளைச்சல் போன்ற காரணங்களால் கண்கள் பாதிக்கப்படுகின்றன. கண்களில் என்ன பாதிப்பு வரும்?! அவற்றிற்கான தீர்வு என்னவென பார்க்கலாம்!!

cfb335a05c7b31754478e5befd5cd750

கருவளையம் / சுருக்கம்…

கண்களைச் சுற்றி இருக்கும் தோல் மிகவும் மென்மையானது. நீர் வடிதல், சிவந்து போதல், வீக்கம், தூக்கமின்மை இவைதான் கண்ணில் வரும் கருவளையத்திற்கு மிக முக்கியக் காரணங்கள்.

பகல் தூக்கத்தைக் காட்டிலும் இரவு 8 மணி நேரத் தூக்கம் அவசியம் தேவை. கருவளையத்தினை போக்க பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை எடுத்துக் கண்களுக்குக் கீழே தடவலாம். வெள்ளரிக்காயை நறுக்கி, மூடிய கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஓய்வு எடுப்பதன் மூலம் கண்களின் சோர்வு நீங்கி, குளிர்ச்சி அடைந்து கருவளையங்கள் மறையும். பன்னீரைப் பஞ்சில் தோய்த்து இரவு தூங்கும்போது கண் இமை மீது வைத்துக்கொள்வதால் கருமை நீங்கி, கண்கள் பளிச்சென்று இருக்கும். கண்ணின் கீழே அதிகச் சுருக்கம் இருப்பதாக நினைப்பவர்கள் ஐலைனரோடு கீழ் இமையில் பென்சிலும் உபயோகித்தால் சுருக்கங்கள் தெரியாமல் இருக்கும்.

ca51ff556cb3b4e4d19c52407efa11c8

இமை

இமைகளில் வறட்சி ஏற்பட்டு பொடுகு மாதிரி இறந்த செல்கள் இருக்கும். பார்க்க அசிங்கமாய் தெரியும்.

இந்த வறட்சி தீர விளக்கெண்ணெய் மற்றும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் அகில் எண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு கலந்து கண்களின் மேல் போட்டு வர, வறட்சி நீங்கி, இமை மற்றும் புருவத்திலும் முடி நன்றாக வளரும்.

புருவம்

கண்களின் அழகை அம்சமாகக் காட்டுவது புருவங்கள்தான். சிலருக்குப் புருவத்தில் முடியே இருக்காது. நிறமும் குறைவாக இருக்கும். தினமும் கரிசலாங்கண்ணி, விளக்கெண்ணெயைத் தலா ஐந்து சொட்டுகள் எடுத்து, சூடு செய்து, நெல் உமித் தூளை ஒரு சிட்டிகை கலந்து, புருவத்தில் மசாஜ் செய்யலாம். அரை மணி நேரத்திற்குப் பின்பு வெதுவெதுப்பான நீரில் துடைத்துவிட வேண்டும். வாரம் மூன்று முறை இப்படிச் செய்வதன் மூலம் புருவத்தில் முடி கருகருவென வளரும்.

18b776beea21dfb87a6b2c060b804f4d

மசாஜ்

கண்களுக்குக் கீழும், புருவங்களுக்கு மேலும் வட்ட வடிவில் மசாஜ் செய்தால், அந்த இடங்களில் ரத்த ஓட்டம் அதிகரித்து, கண்களின் கீழ் உள்ள கோடுகள் மற்றும் சுருக்கங்கள் மறைவதுடன், சோர்வு, நீங்கிப் புத்துணர்வு கிடைக்கும். கண்களுக்கு முன் கட்டை விரலை வைத்து அருகிலும், தொலைவிலும் விரலை நகர்த்தி மாற்றி மாற்றிப் பார்க்க வேண்டும். இதுபோல் தினமும் 15 முறை செய்ய வேண்டும். முகத்திற்கு முன்பு இரண்டு கைகளில் ஒன்றை மேல் நோக்கியும் மற்றொன்றைக் கீழ் நோக்கியும் வைத்து, இரண்டு கைகளையும் திரும்பத் திரும்பப் பார்க்க வேண்டும். தொடர்ந்து இந்தப் பயிற்சியில் ஈடுபடும்போது, கண்களில் புத்துணர்வு கிடைப்பதை உணரலாம். 20 முறை கண்களை மூடி இருட்டை உணர்வதன் மூலம் கண்களுக்கு நல்ல பயிற்சி அளிக்க முடியும்.

fb9161a3adfed3ef188073d817f1dee0

உணவு

கண்ணில் உள்ள விழி வெண் படலம் (கார்னியா), விழித்திரை நன்றாகச் செயல்படுவதற்கு வைட்டமின் ‘ஏ’ அவசியம். வைட்டமின் ‘ஏ’ நிறைந்த கேரட், முருங்கைக்கீரை, சேர்த்துக்கொள்ளலாம். மீன், இறைச்சி, பாதாம், பால் இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது கண் பார்வைக்கு நல்லது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Health

To Top