Entertainment
ஹாலிவுட் ரீ-மேக் படத்தில் விஜய் சேதுபதி: இன்னொரு ஹீரோ யார் தெரியுமா?

ஹாலிவுட் படத்தின் ரீமேக் படம் ஒன்றில் விஜய்சேதுபதி நடித்து வரும் செய்தி தற்போது கோலிவுட்டில் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் நடித்து வரும் திரைப்படம் ’லால் சின்ஹா சாதா’. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது வெளிநாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
அமீர்கான் ஜோடியாக கரீனாகபூர் நடிக்கும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் விஜய்சேதுபதி நடித்து வருகிறார். அதுமட்டுமன்றி யோகி பாபு இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படம் கடந்த 1994ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ’பாரஸ்ட் ஹம்ப்’ என்ற படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. ஹாலிவுட் படத்தின் ரீமேக்கில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்என்ற செய்தி தற்போது பரபரப்பாக வைரலாகி வருகிறது
