கிறிஸ்துமஸ்: வாழ்த்து கூறிய அரசியல் கட்சித் தலைவர்கள்!

கிறிஸ்தவர்களின் பண்டிகையாக கருதப்படுவது கிறிஸ்துமஸ் பண்டிகை. கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை தினம் உலகமெங்கும் கொண்டாடப்பட உள்ளது. இதனால் இன்று இரவே அனைத்து தேவாலயங்கள் திறக்கப்பட்ட நிலையில் காணப்படும்.

கிறிஸ்துமஸ்

நட்சத்திரங்கள், குடில்கள் என ஏராளமான அலங்காரங்களுடன் தேவாலயங்கள் காணப்படும். இன்று இரவு உலகில் உள்ள பல மக்களும் தேவாலயத்துக்கு சென்று கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடுவர். கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பலரும் தேவாலயத்திற்கு இன்று இரவு செல்வர்.

வைகோ

இந்த நிலையில் நாளையதினம் கிறிஸ்மஸ் பண்டிகை என்பதால் பல அரசியல் கட்சித் தலைவர்கள் கிறிஸ்தவர்களுக்கு இன்றைய தினமே வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி வைகோ எம்.பி :மனிதநேயம் செழிக்க சமய நல்லிணக்கம் சமூக ஒற்றுமை காக்க சூளுரைப்போம் என்று கூறியுள்ளார் .

வாசன்

கிறிஸ்தவ மக்கள் முன்னேற்றம் அடைந்து வாழ்வில் எல்லா வளமும் பெற்று மகிழ்வுடன் வாழ என் வாழ்த்துக்கள் என்று  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதனைப் போன்று தமிழ்நாட்டில் உள்ள பல அரசியல் கட்சித் தலைவர்களும் தொடர்ச்சியாக வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment