கிறிஸ்மஸ் தாத்தாக்களுக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம்!: ஜெர்மானிய அரசு;

டிசம்பர் மாதம் என்றாலே அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் மாதமாக காணப்படும். ஏனென்றால் டிசம்பர் மாதத்தில் விடுமுறைகள் அதிகம் கிடைக்கும். அதோடு பண்டிகைகளும் அடுத்தடுத்து காணப்படும்.

தடுப்பூசி

குறிப்பாக கிறிஸ்தவர்களின் பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25ஆம் தேதி உலகமெங்கும் கொண்டாடப்படும். மேலை நாடுகளில் கிறிஸ்மஸ் தாத்தாக்கள், பரிசுப் பொருட்கள் என கிறிஸ்மஸ் கொண்டாட்டம் மிகவும் கொண்டாட்டத்தோடு காணப்படும்.

இந்த நிலையில் கிறிஸ்மஸ் தாத்தாகளுக்கு தடுப்பூசி கட்டாயம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜெர்மனியில் கிறிஸ்மஸ் தாத்தாகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தவேண்டும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி கிறிஸ்துமஸ் விழாவை ஒட்டி வீடுகளுக்கு சென்று வாழ்த்து கூறும் கிறிஸ்மஸ் தாத்தா களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியாக வேண்டும் என்று ஜெர்மானிய அரசு கூறியுள்ளது.

கொரோனா  தடுப்பூசி போட்டுக் கொண்ட கிறிஸ்மஸ் தாத்தா வீடு வீடாக சென்று மக்களை மகிழ்விக்கும் பணியை தொடங்கினர். இந்த ஆண்டு ஏராளமான வீடுகளில் இருந்து தங்களுக்கு அழைப்பு வந்ததாக கிறிஸ்மஸ் தாத்தா மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஏனென்றால் கடந்த ஆண்டு உலகமெங்கும் கொரோனாவின் அச்சுறுத்தல் இருந்தால் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட முடியாமல் மக்கள் தவித்தனர். இருப்பினும் கடந்தாண்டை விட இந்தாண்டு கிறிஸ்மஸ் தாத்தாகளுக்கு அழைப்பு அதிகமாக உள்ளதால் அவர்கள் உற்சாகத்தோடு தங்களது கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment