அடி தூள்!! ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் சோழா சோழா பாடல் வெளியீடு !!

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று கதையை இயக்குனர் மணிரத்னம் இயக்கியிருந்தார். இந்த படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக முடிக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 30ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, விக்ரம் பிரபு, சரத்குமார், ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய் மற்றும் திரிஷா போன்ற நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அதோடு தமிழில் வெளியிடுவதற்கான உரிமையை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ள சூழலில் படத்தின் எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியானது. அதன் படி, இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ள இரண்டாவது பாடலான சோழா சோழா பாடல் இன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன் படி, ஏ.ஆர் ரகுமான் இசையில்  சோழா சோழா  பாடலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.