News
பெயருடன் காவலர் என்று அடைமொழி சேர்த்துக்கொண்ட பாஜகவினர்
பிரதமர் நரேந்திரமோடி தனது பெயரை செளகிடார் என்று பெயருக்கு முன்னாள் சேர்த்துள்ளார். டுவிட்டரில் இப்படி சேர்த்தவுடன் அவரை பாலோ செய்து வரும் தொண்டர்களும், பிஜேபி சார்பு பொதுமக்களும் பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் இதையே தனது பெயருக்கு முன்னாள் சேர்த்துள்ளனர்.

அதாவது செளகிடார் என்றால் காவலாளி என்று பெயர் . நாட்டை காக்கும் காவலாளி என்று பெயரை மோடி மாற்றியதால். அதையே டிரெண்டாக்கி அவர் வழியில் அவர் தொண்டர்களும் பயணித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியை பின்பற்றி பாரதீய ஜனதா கட்சித்தலைவர் அமித் ஷாவும் டுவிட்டரில் தனது பெயருக்கு முன்பாக சவ்கிதார் என்ற வார்த்தையை இணைத்துக் கொண்டுள்ளார்.
இதையொட்டி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நாம் நமது இதயத்தில் இருந்து பேசுவோம். நாம் காவலாளி நரேந்திர மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவோம்” என குறிப்பிட்டுள்ளார்.
மத்திய மந்திரிகள் ஜே.பி. நட்டா, பியூஸ் கோயல், சுரேஷ் பிரபு, தர்மேந்திர பிரதான் மற்றும் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரும் டுவிட்டரில் தங்கள் பெயரை மாற்றம் செய்த தலைவர்கள் வரிசையில் சேர்ந்துள்ளனர்.
