Connect with us

காலரா எதிரொலி: 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

156689 school holiday

தமிழகம்

காலரா எதிரொலி: 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

காலரா பரவல் காரணமாக காரைக்கால் பகுதியில் 3 நாட்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் காலரா நோய் பரவி வருவதால் மாநிலம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி காலரா நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக காரைக்கால் பகுதிகளில் இருக்கும் பள்ளிகள் உணவகங்களில் பொதுமக்களுக்கு சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என்ற உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் குடிநீர் தொட்டிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது காரைக்கால் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே பள்ளிகள் திறக்கும் போது மீண்டும் நோய்த்தொற்றும் அபாயம் அதிகமாக இருந்தால் மீண்டும் அவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அம்மாநிலத்தில் 2 பேர் காலராவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top