நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்கும் 90’ஸ் சாக்லேட் பாய் ஹீரோ…..

எத்தனையோ ஹீரோக்கள் படங்களில் நடிக்கலாம். ஆனால் அனைத்து ஹீரோக்களுக்கும் சாக்லேட் பாய் என்ற அங்கீகாரம் கிடைப்பதில்லை. பெண்களை வசீகரிக்கும் அழகு அல்லது சிரிப்பு என ஏதேனும் ஒன்றை வைத்து சில ஹீரோக்கள் சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் 90களில் ரசிகர்களால் சாக்லேட் பாய் என அழைக்கப்பட்ட நடிகர் என்றால் அது மாதவன் தான். இவரது சிரிப்பிற்காகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதுமட்டுமல்ல மாதவன் என்ற பெயரை சுருக்கி மேடி என செல்லமாக அழைக்கும் அளவிற்கு மாதவனுக்கு பெண் ரசிகைகள் அதிகம்.

கோலிவுட்டில் பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமான மாதவன் மிகவும் பிசியான நடிகராக வலம் வந்தார். ஆனால், 2010ஆம் ஆண்டிற்கு பின்னர் மாதவனுக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. அதன் பின்னர் மாதவன் ஹிந்தி படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். அந்த வகையில் தற்போது மாதவன் நடிப்பில் ஹிந்தியில் மூன்று படங்கள் வெளியாக உள்ளன.

அதில் ராக்கெட்டரி என்ற படத்தை மாதவனே இயக்கி நடித்துள்ளார். இப்படம் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது. ஆனால் தமிழில் தற்போது வரை மாதவனுக்கு எந்த படமும் வெளியாகவில்லை. இறுதியாக விக்ரம் வேதா, மாறா, சைலன்ஸ் ஆகிய படங்கள் மட்டுமே வந்தன. அதன் பின்னர் தமிழில் மாதவன் ஒரு நீண்ட இடைவேளை எடுத்து கொண்டார் போல.

இந்நிலையில் தற்போது ஈரம் படம் மூலம் பிரபலமான இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் மாதவன் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபகாலமாக மாதவன் படங்களை மிகவும் கவனமாக தேர்வு செய்து தான் ஒப்பு கொள்கிறார். அந்த வகையில் இந்த படம் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment