வலுவடையும் சிட்ராங் புயல்! தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மழை?

சிட்ராங் புயல் நாளை அதிகாலை வங்கதேசத்துக்கு அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அந்தமான் கடலின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது.

மக்களே உஷார்!! ஆன்லைன் உணவு ஆர்டரில் ரூ.8.5 லட்சத்தை இழந்த பெண்!!

மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சிட்ராங் புயலாக வங்காள விரிகுடாவில் வடக்கு திசையில் 15 கிமீ வேகத்தில் நகர்ந்து புயலாக மையம் கொண்டுள்ளது.

இதற்கு சிட்ராங் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற்று அக்டோபர் 25 (நாளை) அதிகாலை வங்கதேசத்துக்கு அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தீபாவளி! 2 நாட்களில் ரூ.464.21 கோடிக்கு மது விற்பனை..!!!

இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment