சிவாஜியை வைத்து ஒரு படம் கூட இயக்க முடியவில்லையே… நிறைவேறாத ஆசையைப் பகிர்ந்த பிரபலம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ் சினிமா உலகின் சிம்ம சொப்பனம். அவரது ஒவ்வொரு அசைவும் நமக்கு இமாலய நடிப்பைக் கற்றுத் தரும். ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் அதில் ஒளிந்து இருக்கும்.

அவர் நடித்த ‘ப’ வரிசைப் படங்களைப் பார்த்தாலே போதும். அவர் எவ்வளவு பெரிய திரையுலக ஜாம்பவான் என்று தெரிந்து விடும். பராசக்தி, பந்தம், பாகப்பிரிவினை, படித்தால் மட்டும் போதுமா, பாசமலர், படிக்காதவன், படையப்பா என்று பல படங்கள் இவருக்கு இந்த வரிசையில் உள்ளன.

அவரது வீரபாண்டிய கட்டபொம்மன், பராசக்தி பட வசனங்களைப் பேசிப் பார்த்து தான் பல நடிகர்களும் வாய்ப்பு தேடி சினிமா உலகிற்கே வந்துள்ளனர். அந்த வகையில் பராசக்தி முதல் படையப்பா வரை அவர் நடித்த படங்கள் எல்லாமே ரசிக்கும் வகையில் தான் இருக்கும்.

எவ்வளவு சிக்கலான உணர்ச்சிகளையும் முகபாவங்களில் மட்டுமின்றி உடல் மொழிகளிலும் லாவகமாகக் கொண்டு வந்து அசத்தும் நடிகர் என்றால் அது இவர் மட்டும் தான். இவரது இடத்தை நிரப்ப இன்று வரையில் எந்த நடிகரும் இல்லை என்றே சொல்லலாம்.

அப்பேர்ப்பட்ட நடிகரை இயக்க எத்தனையோ இயக்குனர்கள் ஆசைப்பட்டனர். அவர்களில் ஒருவர் தான் சித்ரா லட்சுமணன். பிரபல தயாரிப்பாளரும், இயக்குனரும், விமர்சகருமான இவர் அதைப் பற்றி என்ன சொல்கிறார் பாருங்கள்.

நடிகர் திலகம் சிவாஜிகணேசனை எனக்கு ரொம்ப பிடிப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கு. இரண்டாவது காரணம் என்னை அவர் தன்னோட சொந்த சகோதரனைப் போல நடத்திய விதம். சிவாஜியை வைத்து ஒரு படம் இயக்கணும்னு ஆசைப்பட்டேன்.

Sithra Lakshmanan
Sithra Lakshmanan

ஆனால் அதற்கான நேரம், காலம் கூடி வரும் வேளையில் அவர் நம்மிடையே இல்லை. என்னுடைய நிறைவேறாத ஆசை பல இருந்தாலும் அதில் முக்கியமான ஆசை இது என்கிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.

சிவாஜியிடம் பிடித்த விஷயங்கள் எது என்று கேட்டால் எதைச் சொல்வது என்று தெரியாமல் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து விடுவோம். ஏன்னா அத்தனை விஷயங்கள் அவரிடம் கொட்டிக் கிடக்கிறது.

ஆனால் சித்ரா லட்சுமணன் அசால்டாக இரண்டே வரிகளில் சொல்லி முடித்தது அவருக்கே உரிய ஸ்டைல் தான். லென்ஸ் நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்குத் தான் இப்படி பதில் சொல்லி இருக்கிறார் அவர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...