கோலாகலமாக நடைபெற்ற சித்திரைப் பெருவிழா தேரோட்டம்!

சோழர்களின் தேசமான தஞ்சாவூரில் இருக்கும் உலக பாரம்பரிய சின்னமான தஞ்சை பெருவுடையார் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கொரோனா பரவல் காரணமாக 2020 மற்றும் 2021 ஆகிய இரு ஆண்டுகள் மட்டும் தேர் திருவிழா நடத்தப்படாமல் தவிர்க்கப்பட்டது. தற்போது கடந்த ஆண்டு முதல் சித்திரை தேரோட்டம் நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 17-ஆம் நாள் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 18 நாட்களாக சித்திரை திருவிழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன.

நாள்தோறும் தஞ்சை பெரிய கோவிலில் காலை மாலை சாமிகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. கொடியேற்றப்பட்ட பதினைந்தாம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு தொடங்கிய தேரோட்டத்தில் தியாகராஜர் மற்றும் கமலாம்பாள் தேரில் வீற்று இருந்தனர்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேருக்கு முன்னாள் விநாயகர் மற்றும் தெய்வானை உடன் சுப்பிரமணியர் வீதி உலா செல்ல தேருக்கு பின்னால் நீலோத் பாலாம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் ஊர்வலமாக சென்றனர். மேலராஜ வீதியில் இருந்து வடம் பிடிக்கப்பட்ட தேர் ராஜ வீதிகள் வழியாக வந்து தேரோட்டம் நிறைவு பெற்றது .ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.