மனித மூளைக்குள் சிப்.. வேற லெவலில் திட்டமிடும் எலான் மஸ்க்!

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் பல்வேறு புதிய முயற்சிகளை எடுத்து வருகிறார் என்பதும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டு உள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் மனித மூளைக்குள் சிப் வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மனித மூளைக்குள் சிப் வைத்து அதனை கம்ப்யூட்டருடன் இணைத்து மூளையில் ஏற்படும் உரையாடலை நேரடியாக பரிசோதனை செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

chip 2 ஏற்கனவே இந்த திட்டத்தை குரங்குகளிடம் வெற்றிகரமாக முடித்து உள்ளதாகவும் விரைவில் மனிதர்களுக்கு இந்த சோதனை செய்ய இருப்பதாகவும் மனிதர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை கம்ப்யூட்டர் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடியும் என்றும் எலான் மஸ்க் கூறியுள்ளார்.

இந்த பரிசோதனைக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும், அரசின் அனுமதி கிடைத்ததும் விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

chip 1எலான் மஸ்க் அவர்களின் நிறுவனங்களில் ஒன்றான நியூரோலிங் என்ற நிறுவனம்தான் இந்த முயற்சியை செய்கிறது என்பதும் இன்னும் ஆறு மாதங்களில் மனிதர்களிடம் இந்த சோதனையை தொடங்கும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இந்த சிப்பை மூளையில் வைப்பதன் மூலம் பார்வை இழந்தவர்கள் பார்வை பெற முடியும் என்றும் முதுகுத்தண்டு, எலும்பு முறிவு அல்லது பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முற்றிலும் குணமாக்க முடியும் என்றும் இந்த சிப் மூலம் எந்த உறுப்பு செயல் இழந்து விட்டதோ, அந்த உறுப்பை தூண்டிவிட்டு வேலை செய்ய முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.