இருமல் வந்ததால் உடைந்த மார்பெலும்புகள்.. அதிர்ச்சி சம்பவம்

சீனப் பெண் ஒருவருக்கு இருமல் வந்ததால் அவரது மார்பு எலும்புகள் உடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனப் பெண் ஒருவர் சமீபத்தில் காரமான உணவை சாப்பிட்டதால் திடீரென இரும தொடங்கினார். அவர் தொடர்ச்சியாக ஒரு சில நிமிடங்கள் இருமி கொண்டிருந்தபோது திடீரென அவரது மார்பில் எலும்புகள் வெடிக்கும் சத்தம் கேட்டது. மேலும் மூச்சு விடுவதற்கும் அவர் சிரமப்பட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் 4 விலா எலும்புகள் உடைந்து இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து அவரை முழு ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.

இருமல் காரணமாக மார்பு எலும்புகள் உடையும் சாத்தியம் என்பது இதுவரை நடந்ததே இல்லை என்றும் இந்த பெண்ணின் உடல் எடை மிகவும் குறைவாக இருந்தது என்றும் எலும்புகள் வலுவின்றி இருந்தது என்றும் அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தப்பெண் மொத்தமே 57 கிலோ எடை இருந்ததாகவும் அவரது விலா எலும்புகள் தெரியும் அளவுக்கு அவரது உடல் அமைப்பு இருந்ததாகவும் மேலும் விலா எலும்புகள் மிகவும் மெல்லியதாக இருந்ததாகவும் மருத்தவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் குணமடைந்த பிறகு உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.