Connect with us

சீன கப்பலின் உளவு முயற்சி… இந்தியா முறியடிப்பு!!

indiachina

செய்திகள்

சீன கப்பலின் உளவு முயற்சி… இந்தியா முறியடிப்பு!!

இலங்கையில் நிறுத்தப்பட்டிருந்த சீன உளவு கப்பலின் உளவு வேலைகளை இந்திய செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில வாரங்களுக்கு முன் இலங்கையில் சீனாவின் உளவு கப்பலானது நங்கூரம்மிடப்பட்டு இருந்தது. இந்தியாவின் எதிர்ப்பை மீறி இலங்கை அனுமதி வழங்கியிருந்தது. இந்நிலையில் இந்தியாவில் ஏவப்பட்ட ஜிசாட் 7, 7ஏ மூலம் சீன கப்பலின் சிக்னல்கள் கண்கானிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக சீன கப்பலில் செயற்கைகோள்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் வசதி இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க ரிசாட் மற்றும் எமிசாட் உளவு செயற்கை கோள்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தொடர்ந்து நான்கு கப்பல்கள் சீன உளவு கப்பலை கண்காணித்து வருவதால், சீன உளவு அமைப்பால் இந்திய பாதுகாப்பு அமைப்பை கண்டறிய முடியவில்லை என கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top