சீனாவில் இருந்து பெங்களூரு திரும்பிய 12 பேருக்கு கொரோனா: மீண்டும் ஆரம்பிக்கும் ஆடம்!

சீனாவில் கடந்த சில நாட்களாக கட்டுக்கடங்காத வகையில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு செல்லும் நபர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டு அதனால் அந்தந்த நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் சீனாவில் இருந்து பெங்களூர் வந்த 12 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து வந்த 37 வயது நபர் உள்பட 12 பயணிகள் சமீபத்தில் பெங்களூர் வந்ததாகவும் அவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி சீனாவில் இருந்து பெங்களூர் வந்த விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவில் இருந்து பெங்களூர் வந்த நபர் 37 வயது நபர் உத்தரப்பிரதேச சேர்ந்தவர் என்றும் அவருடன் வந்த 11 பேர்களும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அனைவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து வரும் விமான பயணிகளால் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.