சீனாவில் நிகழ்ந்த கொடூரம்…; மலையில் விழுந்து நொறுங்கிய விமானம்! 133 பயணிகளின் கதி என்ன?

தற்போது உலகமெங்கும் விமானசேவை ஆனது அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த விமான சேவையை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக காணப்படுகின்றது. ஒரு சில நேரங்களில் விமானங்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. ஒரு சில நேரங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகும்.

இந்த நிலையில் சீனாவில் விமானம் விழுந்து நொறுங்கிய தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் 133 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த விமானம் மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானம் மலையில் விழுந்ததை அடுத்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சீனாவின் குன்மிங் நகரிலிருந்து குவாங்சூ நகருக்கு சென்ற போது விமானம் விபத்தில் சிக்கியது.

சுமார் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானம் சில நொடிகளில் 3225 அடிகளுக்கு இறங்கிய நிலையில் கீழே விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சீன விமானத்தில் பயணித்த நூத்தி முப்பத்தி மூன்று பேரின் கதி என்ன என்பதை அறிய மீட்பு குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

விமானம் விழுந்து நொறுங்கிய மலைப் பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெறுவதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். சீனாவில் விபத்தில் சிக்கிய போயிங் 737 ரக விமானம் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட 117 பேர் அனுப்பி வைத்தது சீன தீயணைப்பு மற்றும் மீட்பு துறை. சீனாவின் ஈஸ்டர் விமான நிறுவனத்தின் விமானம் விபத்தில் சிக்கியது குறித்த விசாரணையை தொடங்கியது. கருப்பு பெட்டியை கைப்பற்றி விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து அறிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment