Connect with us

கோதுமை ஏற்றுமதி விவகாரம்: இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த சீனா?

wheat

செய்திகள்

கோதுமை ஏற்றுமதி விவகாரம்: இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த சீனா?

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோதுமை விவகாரத்தில் இந்தியா சில முடிவுகளை எடுத்தது. இதற்கு ஒருசில நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் இந்தியாவின் முடிவுக்கு தற்போது அண்டை நாடான சீனா ஆதரவளித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக காணப்படுகிறது.

அதன்படி கோதுமையை ஏற்றுமதி விவகாரத்தில் இந்தியாவை குற்றம்சாட்டுவது தீர்வாகாது என ஜி-7 நாடுகளின் விமர்சனத்திற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உள்நாட்டில் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த கோதுமை ஏற்றுமதிக்கு கடந்த வாரம் மத்திய அரசு தடை விதித்தது.

கோதுமை ஏற்றுமதி குறித்த இந்தியாவின் முடிவிற்கு ஜி7 நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மற்ற நாடுகளும் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்தால் நெருக்கடி மோசமாக நிலவும் G-7 நாடுகள் கருத்து தெரிவித்தன.

சீன அரசின் செய்தி நிறுவனமான குளோபல் டைம்ஸ் இந்தியாவிற்கு ஆதரவாகவும் ஏழு நாடுகளை விமர்சித்தும் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா கட்டுப்பாடு விதிக்க கூடாது என கூறும் G-7 நாடுகள் தங்கள் ஏற்றுமதியை ஏன் அதிகரிக்க கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

உலக அளவில் இரண்டாவது அதிக கோதுமை உற்பத்தி செய்யும் இந்தியாவிற்கு கோதுமை ஏற்றுமதி சந்தையில் சிறிய பங்கே உள்ளது என்றும் குளோபல் டைம்ஸ் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top