பேட்டரி ஸ்வாப்பிங் முறை-ஆதரவு தரும் சீனா!! எதிர்க்கும் டெஸ்லா!

தற்போது பல இடங்களில் சார்ஜிங் மையங்கள் அதிகமாக காணப்படுகிறது. பெட்ரோல். டீசல் நிலையங்களுக்கு இணையான அளவில் உருவாகிக் கொண்டே வருகிறது. பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் மின்சார வாகனங்களில் உபயோகிப்பதில் மாற்றிக் கொள்கின்றனர்.

இந்த சார்ஜிங் மையங்கள் முறையைவிட குறைவான நேரத்தில் பேட்டரி ஸ்வாப்பிங் முறை உபயோகப்படுகிறது. இந்த சார்ஜிங் மையங்களுக்கு சீனா ஆதரவு தந்துள்ளது. அதன்படி மின்சார வாகனங்களில் பேட்டரி ஷாப்பிங் முறையை ஆதரிக்கும் சீன நிறுவனங்கள். ஆனால் இதனை டெஸ்லா நிறுவனம் எச்சரித்துள்ளது.

அதன்படி மின்சார வாகனங்களில் செல்லும்போது பேட்டரி குறைந்தால் சார்ஜிங் மையங்களில் வைத்து சார்ஜ் செய்யும் முறையே சிறந்தது என்றும் கூறியுள்ளது. பேட்டரியை பொருத்தி பயணத்தை தொடரும் முறைக்கு சீன ஆதரவு கொடுத்துள்ளது .பேட்டரி சுவாப்பிங் என்னும் முறையில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன என்றும் டெஸ்லா  நிறுவனம் கூறியுள்ளது.

சார்ஜிங் மையங்களில் வாகனத்தை நிறுத்தி அதிக நேரம் பிடிக்கிறது என்று சீன நிறுவனங்கள் கூறியுள்ளது. எதிர்காலத்தில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் சார்ஜ் செய்யும்போது மின்தொகுப்பு கட்டமைப்பில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

பேட்டரியை மாற்று முறையில் மூன்று நிமிடங்களுக்குள் வேலை முடிந்துவிடும் என்றும் சீன நிறுவனங்கள் கூறியுள்ளது. மின்சாரத்துறையில் அதிவிரைவு சார்ந்த தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகிறது என்றும் கூறியுள்ளது.

சார்ஜிங் மையங்களில் சார்ஜிங் ஏற்று முறையே சிறந்தது என்று ஜெனரல் மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேவேளையில் இந்தியாவும் பேட்டரி ஷாப்பிங் முறையை நடைமுறைப்படுத்த பிரத்தியேக கொள்கை வகுக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment