கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது: சீன விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்!

உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது என சீன விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டில் சீனாவில் உள்ள ஆய்வகத்தில் இருந்து உருவானது தான் கொரோனா வைரஸ் என்று அமெரிக்கா உள்பட பல நாடுகள் குற்றம்சாட்டின. அதுமட்டுமின்றி இந்த வைரசை சீன வைரஸ் என்றே ஒரு சிலர் வந்தனர்.

இந்தியா உட்பட உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் கடுமையாக கொரோனா வைரஸ் வாட்டியது என்பதும் இதன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர் என்பதும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

corona affect

இந்த நிலையில் தற்போது தான் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் மீண்டுள்ள நிலையில் இதுகுறித்து சீன விஞ்ஞானி ஒருவர் தெரிவித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் கசிந்தது என்றும் எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் அங்கு சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் கொரோனா வைரஸ் மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்டது என்பது சீனாவுக்கு தெரிந்த விஷயம் என்றும் வூஹான் ஆய்வகத்தில் பணியாற்றிய விஞ்ஞானி ஆண்ட்ரூ பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.