கொத்து கொத்தாய் சடலங்கள்; ஒரே நாளில் 3 கோடி பேருக்கு தொற்று; கோரதாண்டவம் ஆடும் கொரோனா!

கொரோனா உருவான நாள் முதல் எப்போதும் இல்லாத அளவிற்கு சீனாவில் ஒரே நாளில் 3 கோடியே 70 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது பீதியைக் கிளப்பியுள்ளது.

சீனாவில் ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரஸ் பரவால்
மீண்டும் சூறாவளி போல் சுழன்றடிக்க ஆரம்பித்துள்ளது. சீனாவில் மீண்டும் உருவாகியுள்ள கொரோனா அலையால் சீனாவில் நாள்தோறும் லட்சகணக்கானோர் பாதிக்கப்படுவதாகவும், இறந்த போனவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாத அளவிற்கு குவிந்து போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுகின்றன. ஆனால் கொரோனா பலி எண்ணிக்கை தொடர்பாக சீனா அரசு சரியாக தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் டிசம்பர் மாதத்தின் 20 நாட்களில் மட்டும் 24 கோடியே 80 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் சீனாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒரே நாளில் 3 கோடியே 70 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.

உலகிலேயே ஒரே நாளில் இவ்வளவு பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும். சீனாவில் தென்மேற்கில் அமைந்துள்ள சிச்சுவான் மாகாணம் மற்றும் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஆனால் சர்வதேச ஊடகங்கள் கொரோனா பரவல் குறித்து எழுப்பும் கேள்விகளுக்கு சீன அரசு பதிலளிக்காமல் மெளனம் காப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலக நாடுகளில் உள்ள மக்கள் மீண்டும் கொரோனா பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.