ரஷ்யா மீது தடை-எதிர்க்கும் சீனா…! மூன்றாவது உலகப்போர் மூளும் அபாயம்!!!
உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்தால் பல்வேறு தடைகளை ரசியா சந்திக்க நேரிடும் என்று முன்னதாக உலக நாடுகள் பலவும் எச்சரித்தன. ஆயினும் ரஷ்யா அதனைப் பொருட்படுத்தாமல் உக்ரைன் நாட்டின்மீது போர் புரிந்து கொண்டு வருகிறது.
இதன் விளைவாக ஒவ்வொரு நாடும் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. அதன்படி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால் நிலையில் அதன் மீது பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ளன.
அதிலும் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவில் உள்ள 27 தனிநபர், வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் மீது பல்வேறு தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. இதனால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உட்பட்ட வங்கிகளில் அவர்கள் பரிசோதனை செய்ய, நிதி உதவி பெற முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது.
ரஷ்யா மீது மேற்கத்தேய நாடுகள் தொடர்ச்சியாக பொருளாதார தடை விதித்து வருகின்றன. இந்த நிலையில் ரஷ்யா மீது விதிக்கப்படும் தடைகளுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதன்படி ரஷ்யா மீது ஒருதலைபட்சமாக தடைகளை விதிப்பதை எதிர்க்கிறோம் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
ரஷ்யா மீதான தடையால் மூன்றாவது உலகப்போர் மூளும் என்று பெலாரஸ் அதிபர் கூறியுள்ளார். ரஷ்யா மீது மேற்கு நாடுகள் விதிக்கும் கடுமையான தடைகள் மூன்றாவது உலகப் போருக்கு இட்டுச் செல்லும் என்றும் அவர் கூறினார்.
