Connect with us

மீண்டும் பதற்றம்!! லடாக்கில் படைபலத்தை குவிக்கும் சீனா; இந்தியாவின் அடுத்த கட்ட முடிவு என்ன?

இந்தியா சீனா

செய்திகள்

மீண்டும் பதற்றம்!! லடாக்கில் படைபலத்தை குவிக்கும் சீனா; இந்தியாவின் அடுத்த கட்ட முடிவு என்ன?

உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளுக்கும் அண்டை நாடுகளுடன் பெரும் பிரச்சினையாக காணப்படுவது எல்லைப் பிரச்சினை தான். அதிலும் குறிப்பாக நம் இந்தியாவுக்கு சீனா பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் ஒரு எல்லையை பகிர்ந்து உள்ளன.

இதில் அவ்வப்போது சீனா எல்லைப் பகுதியில் பெரும் அச்சுறுத்தலை தரும். அதிலும் குறிப்பாக லடாக் பகுதியில் இந்திய ராணுவத்தினரின் வீரர்களுக்கும் சீன வீரர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தையும் பதற்றமான சூழலும் அவ்வப்போது நிகழும்.

இந்த நிலையில் லடாக் பகுதியில் தற்போது சீனா ஆயுத பலத்தை அதிகரித்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி பகுதியில் தனது படை பலத்தையும் ஆயுத பலத்தையும் சீனா பல மடங்கு உயர்ந்தி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்திய ராணுவழும் கவச வாகனங்கள், ஆயுதங்கள், அதிநவீன ஏவுகணைகளை லடாக் பகுதிகளுக்கும் கொண்டு சென்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேற்குப் பகுதியில் சுமார் 100 கிலோ மீட்டர் சுற்றி படைகளை குவித்துள்ளது சீனா.

வாகனங்கள் கொண்டு வரும் வகையில் சுரங்கப்பாதைகள், விமான ஓடுபாதைகளை சீனா அமைத்துள்ளது. மேலும் 50 கிலோ மீட்டர் தூரம் வரை ஏவுகணைகளை வீசக்கூடிய பீரங்கிகளும் கொண்டுவரப்பட்டுள்ளன.

தரையிலிருந்து வானில் இலக்குகளை தாக்கி அழிக்கும் நவீன ரக ஹெச்.க்யு.9 ரக ஏவுகணை நிறுத்தப்பட்டுள்ளன. ஹெச்.க்யு.9 ரக ஏவுகணை 100 முதல் 300 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ளவர்களை தாக்கும் வல்லமை கொண்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top