சீனாவில் மீண்டும் முழு ஊரடங்கு: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

சீனாவில் கடந்த ஆண்டு ஆரம்பத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது என்பது கோடிக்கணக்கானோர் இதனால் பாதிக்கப்பட்டனர் என்பதும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சீனா உள்பட உலக நாடுகள் முழுவதிலும் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்பதும் இயல்பு நிலை திரும்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திடீரென சீனாவின் ஒரு முக்கிய பகுதியில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் உள்ள லான்சூவ் என்ற பகுதியில் சுமார் 40 லட்சம் மக்கள் வசித்து வரும் நிலையில் அந்த பகுதியில் மீண்டும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாகவும் இதை அடுத்து சீன அரசு அந்த நகரம் முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

மீண்டும் சீனா முழுவதும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க சீன அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் சீனாவிலுள்ள ஹாங்ஃபுயுவான்என்ற பகுதியில் 23 ஆயிரம் பேர் வரை வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு புதிய வகை டெல்டா வைரஸ் பரவியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment