உக்ரைனுக்கு உதவி கரம் நீட்டிய சீனா: இந்திய மதிப்பில் எத்தனை கோடி தெரியுமா ?
கடந்த சில நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பல உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதர தடைகளை விதித்து வருகின்றனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்யாவும் பல்வேறு தடைகளை விதித்து வருகின்றனர். போரினால் உக்ரைனில் பொருளாதர பாதிப்பு அடைந்துள்ளதால் தற்போது உக்ரைனுக்கு பல நாடுகள் பொருளாதர உதவிகளை செய்து வருகின்றனர்.
இதனிடையே உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில், உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் 50 லட்சம் யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.6 கோடி) வழங்கியுள்ளது.
இந்நிலையில் மீண்டும் உக்ரைனுக்கு உதவ 1 கோடி யுவான் (இந்திய மதிப்பில் சுமார் 12 கோடி) மனிதாபிமான அடிப்படையில் வழங்கியதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறியுள்ளார்.
மேலும், ரஷ்யாவின் நட்பு நாடான சீனா நடுநிலை பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
