News
கொரோனாவில் இருந்து மீண்ட சீன மாகாணம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

சீனாவில் வூகான் என்ற மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ்கொஞ்சம் கொஞ்சமாக நாடு முழுவதும் பரவியது மட்டுமின்றி அண்டை நாடுகளுக்கும் உலக நாடுகளுக்கும் மிக வேகமாக பரவி சுமார் 9 ஆயிரம் உயிர்களை பலி வாங்கி விட்டது
மேலும் இந்த வைரஸால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சீனாவில் உள்ள ஹூபெய் என்ற மாகாணத்தில் புதிதாக கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என அம்மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது
கடந்த 36 மணி நேரத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றும் கடந்த செவ்வாய்க்கிழமை மட்டுமே ஒரே ஒருவருக்கு புதிதாக கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது
இதனை அடுத்து சீனா கொஞ்சம் கொஞ்சமாக கொரோனாவில் இருந்து மீண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
