ஒரே நாளில் 3.70 கோடி பேருக்கு கொரோனா : சீன அரசு எடுக்கும் அதிரடி நடவடிக்கை

கடந்த சில வாரங்களாக சீனாவில் அத்துமீறி கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும் தினமும் லட்சக்கணக்கில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 3.7 கோடி பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பதாக வெளிவந்த தகவல் சீன அரசை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஏற்கனவே சீனாவில் உள்ள பல நகரங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் கோடிக்கணக்கில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவது சீன அரசை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

இதனை அடுத்து மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க சீன அரசு முடிவு செய்திருப்பதாகவும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர கட்டப்பட்டு விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சீனாவின் அளவுக்கு அதிகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதை பார்த்து இந்தியா உள்பட உலக நாடுகள் கடும் அச்சம் கொண்டுள்ளனர். சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர்கொரோனா வைரஸ் பரவிய நிலையில் அதே போன்ற நிலை மீண்டும் ஏற்படுமோ என்ற அச்சம் உலக மக்கள் மத்தியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.