கதிகலங்கிய சீனா! ஒரே நாளில் 5 ஆயிரம் உயிரிழப்பு… பீதியில் உலக நாடுகள்!!

கொரோனாவின் தாயகமாக கருதப்படும் சீனாவில் பரவிய கொரோனா உலகம் முழுவதும் தனது ஆட்டத்தை காட்டி வருகிறது. இத்தகைய கொரோனாவால் பல கோடி மக்கள் பாதிப்படைந்தது மட்டுமல்லாமல் பல லட்சம் நபர்களின் உயிரையும் காவு வாங்கியுள்ளது.

இந்நிலையில் அந்நாட்டில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி, தினசரி பாதிப்பு 10 லட்சமாக உள்ள நிலையில் 37 லட்சமாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே சமயம் மொத்த மக்கள் தொகிஅ 147 கோடி இருக்கும் பட்சத்தில் நிலைமை கூடுதலாக அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. தற்போது நாள்தோறும் தினசரி பாதிப்பானது 5 ஆயிரமாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே அதிக வீரியம் கொண்ட பிஏஃப்.7 வகை கொரோனா இந்தியாவிலும் கால் பதித்திருப்பதால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்களை கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என தெரிவித்துள்ளது.

அதே போல் பொதுமக்கள் அனைவரும் மாஸ் அணிதல், தனி மனித இடைவெளி கடைப்பிடிப்பது கட்டாயம் என சுகாதாரத்துறை அமைச்சகம் வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.