சீனாவில் கடும் பனிமூட்டம்: சாலை விபத்தில் சிக்கி 17 பேர் பலி!!

சீனாவில் கடந்த சில மாதங்களாக கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். அந்த வகையில் கிழக்கு ஜியாங்கி மாகாணத்தில் பனிப்பொழிவு நீட்டித்து வருகிறது.

இந்நிலையில் போக்குவரத்து மிகவும் மோசமானதால் ஏற்பட்ட சாலை விபத்தில் இன்று ஒரு நாள் மட்டும் சுமார் 17 பேர் உயிரிழந்து இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல் 22 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிகிறது.

ஆதார் இருக்கையில் மக்கள் ஐடி எதற்கு? – விஜயகாந்த் கேள்வி!

இது தொடர்பாக நன்சாங் போக்குவரத்து போலீசார் வெளியிட்ட தகவலின் படி, விபத்து நடந்த பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருப்பதாகவும், வாகன ஓட்டிகள் கவன குறைவால் இவ்வாறான விபத்துகள் நேரிடுவதாக கூறப்படுகிறது.

அதே போல் வாகம் ஓட்டுபவர்கள் வேகத்தை குறைத்தும், மற்ற வாகனங்களை முந்தி செல்ல முயல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்நாட்டில் கடுமையான போக்குவரத்து நெறிமுறைகள் இல்லாததும் விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.