எதிர்பாராத விதமாக சில்லு கருப்பட்டி நடிகர் விபத்தில் உயிரிழந்தார்…

7726887fa5c1f2988666cb3de5c035ba-2

சில்லுகருப்பட்டி பட நடிகர் விபத்தில் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019-ஆம் ஆண்டில், இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சில்லு கருப்பட்டி. நான்கு வெவ்வேறு கதைகளை கொண்டு உருவான இத்திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, ஹிட் அடித்தது. 

இத்திரைப்படத்தில் நடித்து கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஶ்ரீராம். க்ராவ் மகா என்ற இஸ்ரேல் தற்காப்பு கலையில் தேந்தவரான இவர், தமிழக போலீஸாருக்கும் பயிற்சி வழங்கியுள்ளார். 

இந்நிலையில் இன்று அவரது வீட்டு மாடியில் பயிற்சியில் இருந்த போது, அவர் எதிர்ப்பாராத விதமாக தவறி விழுந்து விபத்தில் உயிரிழந்துள்ளார். இதை தொடர்ந்து, ரசிகர்களும் திரைத்துறையினர் அதிர்ச்சியில் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.