தமிழகத்திற்கு குளிர்ச்சியான அறிவிப்பு-அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு…!!

தமிழகத்தில் தற்போது கோடைகாலம் நிலவுகிறது. அதுவும் குறிப்பாக மே 4ம் தேதி அன்று தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த மழையானது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. அதன்படி அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

4,5,6 தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. அடுத்த இரண்டு நாட்களும் பகல் நேர வெப்பநிலை அதிகபட்சமாக இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னையில் இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழை பெய்ய வாய்ப்பே இல்லை என்றும் சென்னை வானிலை மையம் கூறியது. 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment