சிலியில் பற்றி எரியும் பயங்கர காட்டுத் தீ; 13 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

சிலி நாட்டில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயில் சிக்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்க நாடான சிலியில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக காட்டுத் தீ கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது. சிலி நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சுமார் 8,000 ஹெக்டேர் பரப்பளவிலான காடுகள் எரிந்து சேதமடைந்துள்ளது.

தீ விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை இழந்துள்ள நிலையில், 13 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மொத்தம் 34 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் காட்டுத்தீ பரவி உள்ளதாகவும் இதுவரை 65 காட்டுத்தீ சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.