குழந்தைகளுக்கு பிடித்தமான மேகி வைத்து ஒரு ஈவினிங் ஸ்னாக்ஸ் செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்னாக்ஸ் செய்வது என்பது மிகவும் கடினம். நாம் என்னதான் வித்தியாசமாக ரெடி பண்ணி வைத்தாலும் அது அவர்களுக்கு பிடிக்காமல் ஒதுக்கிவைப்பார்கள். இதனை தவிர்க்க குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு பொருளில் நாம் ரெடி பண்ணி கொடுத்தால் அது உடனே காலியாகிவிடும். அப்படிப்பட்ட குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு மேகி. மேலும், நாம் வித்தியாசமாக மேகி வைத்து எப்படி பக்கோடா செய்வது என்று இதில் பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:-

மேகி – 140 கிராம்,
வெங்காயம் – தேவையான அளவு
பச்சை மிளகாய் – தலா ஒன்று,
கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு,
இஞ்சி – பூண்டு விழுது – தலா அரை டீஸ்பூன்,
மேகி மசாலா,
வெண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன்,
சீஸ் – ஒரு கியூப்,
கேரட் – ஒன்று,
மைதா மாவு – 2 டீஸ்பூன்.

கிராமத்து ஸ்டையில் கார சாரமான பருப்பு உருண்டைக் குழம்பு!

செய்முறை:-

முதலில் மேகியை கொதிக்கும் தண்ணீரில் போட்டு அது வெந்ததும் தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழையைப் பொடி பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும். சீஸ் மற்றும் கேரட்டைத் நன்றாக துருவி எடுத்துக்கொள்ளவும் . மைதா மாவைத் தண்ணீரில் கரைத்து வைக்கவும். மீதி மேகியைப் பொடி பொடியாக மாற்றி கொள்ளவும். வேகவைத்த மேகி ஆறியதும் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், கொத்தமல்லித்தழை, இஞ்சி – பூண்டு, வெண்ணெய், சீஸ், மேகி மசாலா சேர்த்து நன்றாகப் பிசையவும். எண்ணெய் தடவிய ஒரு தட்டில் இதைப் பரப்பி குறைந்தது 30 நிமிடங்கள் குளிர வைக்கவும். 30 நிமிடத்திற்க்கு பிறகு எடுத்து இதைச் சதுர துண்டுகளாக அல்லது வட்டமாக நறுக்கிக்கொள்ளவும். இதை மைதா கரைசலில் முக்கியெடுத்து, பொடி பொடியாக மாற்றி வைத்துள்ள மேகியில் புரட்டவும். சூடான எண்ணெயில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.