குழந்தைகள் நன்றாக சாப்பிட அன்னபூரணி வழிபாடு

1691115810e360f8295cf4a855eb2bc9
சில குழந்தைகள் சோறு ஊட்டும் பொழுது சாப்பிடாது. குழந்தைகள் நல்ல முறையில் உணவு உண்ணவும், உடல் திடகாத்திரம் அடையவும் அன்னபூரணியை வழிபட வேண்டும்.

சில குழந்தைகள் சோறு ஊட்டும் பொழுது சாப்பிடாது. அதைப் பார்த்து பெற்றோர்கள் கவலைப்படுவர். சில குழந்தைகள் மிட்டாய், ரொட்டி இனிப்புப் பொருட்களை மட்டும் சாப்பிடும். சோறு ஊட்டும்பொழுது சாப்பிடாமல் வெறுத்து ஒதுக்கும். குழந்தைகள் நல்ல முறையில் உணவு உண்ணவும், உடல் திடகாத்திரம் அடையவும் அன்னபூரணியை வழிபட வேண்டும்.

உணவு ஊட்டும் முன்னால் தினமும் குழந்தையின் கையால் ஒருபிடி அரிசியை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். 45 நாட்கள் தொடர்ந்து அன்னபூரணி படத்தின் முன் அந்த அரிசியைச் சேர்த்து வைக்க வேண்டும். ஒரு மண்டல அரிசி சேர்ந்த பிறகு, அதோடு நாமும் கொஞ்சம் அரிசியைச் சேர்த்து ஏழைக் குழந்தைகளுக்கு அன்னதானம் செய்யலாம்.

அதோடு மட்டுமல்லாமல் குருவாயூர் மற்றும் நின்ற கோலத்து விஷ்ணு ஆலயங் களுக்குச் சென்று, குழந்தையின் எடைக்கு எடை வெல்லமும், பச்சரிசியும் கொடுத்து, இறைவனை அர்ச்சித்து வழிபட்டால் சாப்பிட மறுக்கும் குழந்தைகள் நன்றாக உணவு உண்ணத் தொடங்கும். 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.