பெற்றோர்களை கவனிக்காத பிள்ளைகள்: ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துக்களை எழுதி வைத்ததை ரத்து செய்ய பெற்றோருக்கு உரிமை இருப்பதாக உயர்நீதி மன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

சென்னையை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரி தனது சொத்துக்களை மூத்த மகன் பெயருக்கு எழுதி வைத்திருந்தனர். இந்நிலையில் வயதான காலத்தில் உதவி செய்யாமலும், மருத்துவ செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

கட்டுப்பாட்டை இழந்த பைக் வீட்டின் சுவற்றின் மீது மோதி விபத்து!!!

இதன் காரணமாக எழுதிவைத்த சொத்துக்களை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.

இதனை எதிர்த்து மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கின் விசாரணை அமர்வு இன்று வந்தது. அப்போது பேசிய நீதிபதி, கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துக்களை எழுதி வைத்ததை ரத்து செய்ய பெற்றோருக்கு உரிமை இருப்பதாக தெரிவித்தார்.

கழிப்பறையில் வீசப்பட்ட குழந்தை: உறவினர்கள் அதிர்ச்சி..!!

மேலும், சமூதாயத்தில் இந்த குரல் எதிரொலிப்பதாகவும், தற்போது சமூகம் இதன் மதிப்பை இழந்து வருவதாகவும், மகனின் நடத்தை இதயமற்றது என உயர்நீதி மன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment