Connect with us

அமைச்சர்களின் குழந்தைகள் அரசுப்பள்ளிகளில் படிக்கிறார்களா? – சீமான் கேள்வி!!

seaman

தமிழகம்

அமைச்சர்களின் குழந்தைகள் அரசுப்பள்ளிகளில் படிக்கிறார்களா? – சீமான் கேள்வி!!

அரசு பள்ளி, கல்லூரிகளில் தரமான கல்வி வழங்கவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் குற்றம்சாட்டினார்.

கடந்த சில தினங்களுக்கு முன் அறிமுகப்படுத்திய காலை சிற்றுண்டி திட்டத்தில் வழங்கப்படும் உணவானது உங்களுடைய பேரக்குழந்தைகள் சாப்பிடும் தரத்திற்கு இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் பிள்ளைகள் பள்ளி கல்லூரிகளில் படிக்கிறதா? என்ற கேள்வியை முன்வைத்துள்ளார். இதற்கு காரணம் தரமற்ற ஆட்சிதான் என கூறியுள்ளார்.

இதனையடுத்து மாதம் ரூ.60 ஆயிரம் சம்பளம் வாங்கும் அரசு ஆசிரியர்கள் மீது நம்பிக்கை இல்லாமல் ரூ.6 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் மீது நம்பிக்கை வைப்பது எவ்வளவு பெரிய கொடுமை என சீமான் கூறியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் 4 முதலமைச்சர்கள் ஆட்சி செய்வதாக இபிஎஸ் கூறியதற்கு எண்ணிக்கை குறைவாக உள்ளது என்றும் இபிஎஸ் கூறிய கருத்தினை மதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top