ஒமைக்ரானால் குழந்தைகளுக்கு மாரடைப்பு அபாயம் :ஆய்வில் அதிர்ச்சி தகவல் !!
குழந்தைகளுக்கு ஒமைக்ரான் தொற்றால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒமைக்ரான் காற்றில் வேகமாக பரவக்கூடியது என்றாலும் டெல்டா வகையை விட லேசான பாதிப்பை தான் ஏற்படுத்தக் கூடும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகளை கொண்டு அமெரிக்க பல்கலைக்கழகங்கள் ஆய்வில் ஈடுபட்டனர்.
அதன் படி சுமார் 18, 849 குழந்தைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில் அனைவருக்கும் ஒமைக்ரான் பாதித்த குழந்தைகளுக்கு தொண்டை, மூக்கு, குரல்வலை அடங்கிய மேல் சுவாசக்குழாய்களில் தொற்று நோய் தீவிரமடைந்து வருவது தெரியவந்துள்ளது.
இதனால் சாதாரணமாக ஏற்படும் மூக்கடைப்பு, வறண்ட இருமல், நெஞ்சுவலி உள்ளிட்டவைகளை விட கொரோனாவிற்கு பிறகு ஏற்படும் பாதிப்புகளால் குழந்தைகள் கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதனால் சுவாசிப்பதில் ஏற்படும் சிரமம், சுருங்கிய சுவாசக்குழாய் போன்ற காரணங்களால் குழந்தைகளுக்கு மாரடைப்பு ஏற்படக்கூடும் என ஆய்வில் எச்சரித்துள்ளனர்.
