
Tamil Nadu
தமிழகமே அதிர்ச்சி..! காரில் சிக்கிய 3 குழந்தைகள் பலி..
நெல்லை மாவட்டம் பணங்குடி அருகே உள்ள லெப்பைகுடியிருப்பு கிராமத்தில் வசிக்கும் 7 வயதான நித்திஷா, 5 வயதான நித்திஷ், 4 வயதான கபிலன் ஆகிய 3 குழந்தைகளும் விளையாடி கொண்டிருந்ததாக தெரிகிறது.
அப்போது பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் உள்ளே சென்று விளையாடி கொண்டிருந்தாக தெரிகிறது. இதில் காருக்கு உள்ளே இருந்து திறக்க முடியாமல் போனதால் மூச்சு திணறி உயிருக்கு போராடியுள்ளனர். இந்த சூழலில் இதனை அக்கம் பக்கத்தினர் யாரும் கவனிக்கவில்லை என தெரிகிறது.
இந்நிலையில் நீண்ட நேரத்திற்கு பிறகு 3 குழந்தைகளில் 2 குழந்தைகள் இறந்த நிலையில் ஒரு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது அந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே பணங்குடி போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், கடந்த ஆண்டில் இதே போன்று காரில் சிக்கி 4 குழந்தைகள் சிக்கி உயிரிழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
