குழந்தைகள் விருப்பமான ஓமப்பொடி இனி வீட்டுலே! மிஸ் பண்ணாதீங்க!

குழந்தைகள் பொதுவாக வீட்டில் செய்யும் உணவுகளை கொடுப்பதே சிறந்தது. அந்த வகையில் நம் வீட்டு மழலைகளுக்கு வீட்டிலே விருப்பமான ஓமப்பொடி செய்து கொடுத்து மகிழ்விக்கலாம்.

தேவையான பொருட்கள் :

கடலை மாவு (கடலைப்பருப்பை வெயிலில் உலர்த்தி நன்கு சலித்து மாவாக்கி கொள்ளவும்) – அரை கிலோ, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள்,
உப்பு – சிறிதளவு ,
பச்சரிசி மாவு – 100 கிராம்,
ஓமம் – 2 டீஸ்பூன் (மிக்ஸியில் நீர்விட்டு அரைத்து வடிகட்டி அதை மட்டும் எடுத்து கொள்ளவும்),
எண்ணெய் – தேவையான அளவு.
மிளகுத்தூள் – சீறிதளவு

உலர்ந்த அத்திப்பழம் தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ !

ooam

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள மாவுகள் அனைத்தையும் (எண்ணெய் விடாமல்) சிறிது நீர் விட்டு பிசைந்து, ஓமப்பொடி அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.

கிராமத்து ஸ்டைல் வத்தல் குழம்பு! எப்படி செய்யனு தெரியுமா?

குறிப்பு: விருப்பப்பட்டால், சிறிதளவு மிளகாய்த்தூள் / மிளகுத்தூள் சேர்த்து செய்யலாம். மிளகுத்தூள் சேர்த்து கொள்ளுவதால் குழந்தைகளுக்கு சளி தொல்லை இருந்தால் நீங்கி விடும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment