Connect with us

மாணவர்கள் மகிழ்ச்சி: பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புமாறு கட்டாயப்படுத்த முடியாது!!

News

மாணவர்கள் மகிழ்ச்சி: பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புமாறு கட்டாயப்படுத்த முடியாது!!

18461e6768ab2f0d908e799bd3516a80

தற்போது நம் இந்தியாவில்  கொரோனா இரண்டாம்  குறைந்து விட்டது. இதனால் இந்தியாவில் பல மாநிலங்களில் பள்ளிகள் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நம் தமிழகத்திலும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு இயங்குகின்றன. மேலும் அவ்வப்போது இதற்கு எதிராக பலரும் வழக்கு போடுகின்றனர். மேலும் மாணவர்கள் கட்டாயமாக பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றும் சிலர் கூறி வருகின்றனர். அதுகுறித்து தற்போது உச்சநீதிமன்றம் சில முக்கிய அறிவிப்புகளை கூறியுள்ளது.8b18b6185c18853b556417c3cd82ba37-2

அதன்படி மாணவர்கள் வகுப்புகளுக்கு நேரில் வரும் வகையில் பள்ளிகளை திறக்குமாறு அரசுகளுக்கு ஆணையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. மேலும் பள்ளிகளை திறக்க உத்தரவிடக் கோரிய டெல்லி மாணவர் ஒருவரின் மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. மனுதாரர் டெல்லியை  சேர்ந்தவர் என்பதால் அந்த மாநில அரசு அணுகுமாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். மாநிலத்துக்கு மாநிலம் நிலைமை வேறுபாடுவதாகும் டி ஒய் சந்திரசூட் மற்றும் பி வி நாகரத்தின அமர்வு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் மாணவர்கள் படிப்படியாக பள்ளிக்கு வர வேண்டிய தேவையை மாநில அரசுகள் உணர்ந்தே உள்ளன என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.  இப்போதுதான் இரண்டாம் அலையில் இருந்து நாடு மீண்டுள்ளது. மேலும் தொற்று மீண்டும் அதிகரிக்க கூடிய அபாயமும் உள்ளது என்றும் கூறியுள்ளது. தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புமாறு பொது உத்தரவை பிறப்பிக்க முடியாது என்றும் கூறப்படுகிறது.

பள்ளிகளை திறக்க முடிவை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மேற்கொள்ள அனுமதிப்பதே ஜனநாயக முறை என்று நீதிபதிகள் கூறினர். 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க பல மாநில அரசுகள் முடிவெடுத்துள்ளன என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுடன் ஒன்றாம் வகுப்பு மாணவர்களையும் சேர்த்து பள்ளிக்கு வர உத்தரவிட முடியாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top