Connect with us

சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகள்… இயக்குனர் பார்த்திபன் ஆவேசம்!!

parthiban

பொழுதுபோக்கு

சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகள்… இயக்குனர் பார்த்திபன் ஆவேசம்!!

சென்னை எழும்பூரில் உள்ள காவல் அருங்காட்சியகத்தை பார்த்திபன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் காவல்துறையினர் நமது நண்பண் என்றும் அவர்களை பற்றி நிறைய அறிவதற்கு காவல் அருங்காட்சியகத்தை பார்வையிட வேண்டும் என கூறினார்.

அதோடு இதற்கு பின்னால் நிறைய தியாகங்கள் இருப்பதாகவும், இதனை புரிந்து நடத்தல் வேண்டும் என கூறியுள்ளார். அதே போல் சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்த போதிலும் இன்னும் 10 பேராவது இருந்துகொண்டுதான் உள்ளார்கள் என கூறினார்.

இதனை ஒழிக்க வேண்டும் என கூறிய அவர் வேறொரு முகம் இருப்பதை கண்டறிந்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை வைப்பதாக இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் கூறியுள்ளார்.

பின்னர் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அதன் மூலம் நமக்கான சந்தோஷம், பாதுகாப்பு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top