அனைத்து பள்ளிகளையும் கலப்புப் பள்ளிகளாக மாற்ற வேண்டும்!! – குழந்தை உரிமைகள் ஆணையம் அதிரடி;;

கேரளாவில் இருக்கும் அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளை கலப்பு பள்ளிகளாக மாற்ற குழந்தைகள் உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் 250 பெண்கள் பள்ளிகளும் மற்றும் 164 பள்ளிகள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டில் இருந்து மாநிலத்தில் உள்ள அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளை கலப்பு பள்ளிகளாக மாற்ற வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது இணை கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று கேரள குழந்தை உரிமை ஆணையம் கேரள கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே கலப்பு பள்ளிகளாக மாற்றுவதற்கு முன்பு பள்ளிகளில் உள்ள கழிவறைகளை சரிசெய்யவும், இணை கல்வி குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறியுள்ளது.

மேலும், அடுத்த கல்வியாண்டில் 90 நாட்களில்  கலப்பு பள்ளிகளாக மாற்ற  நடவடிக்கை எடுக்குமாறு பொதுக் கல்வித் துறை செயலாளர்களுக்கு கேரள குழந்தை உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment