Tamil Nadu
குழந்தைகள் ஆபாச படம் பார்த்த நபர் கோவையில் அதிரடி கைது!

குழந்தைகள் ஆபாச படத்தை பார்த்ததாக திருச்சி மற்றும் சென்னையில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது கோவையில் குழந்தைகள் ஆபாச படத்தை பார்த்தது மட்டுமின்றி முகநூலில் பதிவிட்டதாக போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
குழந்தைகள் ஆபாச படத்தை பார்த்தாலோ அல்லது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தாலோ கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் கோவை அருகே அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரெண்டா பாசுமாடரி என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் குழந்தைகள் ஆபாச வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இது குறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு வந்த புகாரின் அடிப்படையில் ரெண்டாவை போலீசார் கைது செய்தனர்.
இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பொள்ளாச்சியில் உள்ள ஒரு டைல்ஸ் கடையில் வேலை செய்து வந்துள்ளதாகவும் கடந்த சில ஆண்டுகளாக இவர் தமிழகத்தில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது
